🏛தஞ்சை ⛰சுவாமிமலையில் திடீர் 🔥தீ விபத்து😱 - Agnipuratchi

🏛தஞ்சை ⛰சுவாமிமலையில் திடீர் 🔥தீ விபத்து😱

Share This

🏛தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ⛰சுவாமி மலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் 🔥தீ விபத்தில் தமிழக அரசின் இலவச பொருட்கள் கருகி சாம்பலாகின😳. 🏛பாபநாசம் சுற்றுவட்டாரங்களில் அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் பழுதடைந்ததாக😐 எழுந்த புகாரினை அடுத்து அவற்றினை சீரமைத்துக் கொடுக்க அரசு உதவியுடன் கடைகள் அமைக்கப்பட்டன😯. இதை தொடர்ந்து பழுது நீக்குவதற்காக🚫 சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்விசிறிகள், 250க்கும் மேற்பட்ட மிக்ஸி மற்றும் 750க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் உள்ளிட்டவை ⛰சுவாமிமலை பேரூராட்ச்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன🤨. இந்த நிலையில் இங்கு நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் 🔥தீ விபத்தில் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலாகின😱. மேலும் சமுதாயக் கூடத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன😨. இதை தொடர்ந்து தகவல் அறிந்து இரண்டு வாகனங்களில் சென்ற 🚒தீயணைப்பு துறையினர் 🔥தீயை கட்டுப்படுத்த முடியாமல் பல ⌚மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து தீ விபத்துக்கு 🔌மின் கசிவு காரணம் என கூறப்படுகிறது🗣. இது குறித்து 👮போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages