அத்திவரதர் 🙏தரிசன ⌚நேரம் நீட்டிப்பு👍 - Agnipuratchi

அத்திவரதர் 🙏தரிசன ⌚நேரம் நீட்டிப்பு👍

Share This

108 திவ்ய தேசங்களில் ஒன்று 🏛காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் 🌊குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் 🗿அத்திவரதர் 📆40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 👥பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்😯. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட 💺கலெக்டர் பொன்னையா 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்🎙, "காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்🙂. ஏராளமான 👥பக்தர்கள் வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய ⌚காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது😳. இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகம்⏫ இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை ⌚5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம்🙏 செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages