இனி பால் பாக்கெட்டில் விற்கக்கூடாது🚫-🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖. - Agnipuratchi

இனி பால் பாக்கெட்டில் விற்கக்கூடாது🚫-🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖.

Share This

மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 🏛தமிழக அரசு, கடந்த ஆண்டு 📆ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. பின்பு 📆ஜனவரி 2019 முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவை⚖ எதிர்த்து😡 பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குகளுக்கு தடை🚫 விதிக்க 🏛மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது😯 என்று உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது🗣. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட 🤵நீதிபதிகள், வழக்கில் சுற்றுச்சூழல் வனத்துறையையும், மத்திய ரசாயனத்துறையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்⚖. மேலும் பிளாஸ்டிக் தடை🚫 குறித்து இரு துறைகளும் பதிலளிக்குமாறும்🗣 உத்தரவிட்டனர். அதன் பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறிவியல் ஆய்வின்👀 அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 📆100 ஆண்டுகள் வரை ஆகும் என்பதாலும், சுற்றுச்சூழலலுக்கு இது பெரும் அச்சுறுத்தல்😨 ஏற்படுத்திவருவதாலும், மறுசுழற்சி செய்ய பிளாஸ்டிக் பொருட்களின் தடை🚫 உத்தரவை தமிழக அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு⚖ பிறப்பித்தனர். இதனையடுத்து, ஆவின் பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு பதிலாக, 🍶பாட்டிலில் விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய 🏛தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்⚖ எனவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages