தலைமை செயலகத்தில் 🚰குடிநீர் பணிகள் குறித்து 🏛தமிழக 💺முதல்வர் ஆலோசனை. - Agnipuratchi

தலைமை செயலகத்தில் 🚰குடிநீர் பணிகள் குறித்து 🏛தமிழக 💺முதல்வர் ஆலோசனை.

Share This

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தினம் காலை ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது😯. ஒவ்வொரு வேகனுக்கும் 👥2 பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு மொத்தம் 100 பேர் 💦தண்ணீரை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சோதனை ஓட்டமும் முடிந்தது🙂. இதற்கிடையே, 🚆ரயிலில் உள்ள கேலன்களில் 💦50,000 லிட்டர் தண்ணீர் நிரப்புவதற்கு பதிலாக குடிநீர் வாரியம் 💦70,000 லிட்டர் நீர் நிரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேலன்களை பரிசோதித்த👀 ரயில்வே நிர்வாகம் ஒரு கேலனில் 💦50,000 லிட்டர் நீருக்கு மேல் இருந்தால் ரயிலை இயக்க முடியாது❌ என அறிவித்துள்ளது. தற்போது கூடுதலாக ஏற்றப்பட்ட 💦20,000 லிட்டர் நீரினை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை 🏛தலைமை செயலகத்தில் 🚰குடிநீர் பணிகள் தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் 🤔ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த 👥கூட்டத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற 🏛மாவட்டங்களுக்கு 🚰குடிநீர் விநியோகம் செய்வது பற்றியும் 🤔ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் 🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்🔈, சென்னைக்கு நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து 🚆ரெயில் மூலம் 🚰குடிநீர் கொண்டு வரப்படும்👍 என தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages