🏛கேரளாவில் தொடர் மழை☔-வைகை அணைக்கு 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫ - Agnipuratchi

🏛கேரளாவில் தொடர் மழை☔-வைகை அணைக்கு 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫

Share This

🏛தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் 🌾விவசாயத்திற்கும் மற்றும் 🚰குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக வைகை அணை உள்ளது😯. இதை தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 27 அடியாக குறைந்துள்ளது⏬. மேலும் இந்நிலையில் கடந்த சில தினங்களாக 🏛கேரளாவில் பெய்து வரும் ☔தொடர் மழையின் காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது⏫. மேலும் இங்கிருந்து ⌚வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது😳. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது👍. இதனையடுத்து அணையில் நீர்வரத்து ⌚வினாடிக்கு 30 கனஅடியாக உள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 27.85 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 291 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது😐. மேலும் இதை தொடர்ந்து 🏛கேரளாவில் தொடர்ந்து ☔மழை பெய்யும் பட்சத்தில் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages