சென்னைக்கு அழைத்துவரப்பட்ட முகிலனிடம், கடந்த 1⃣4⃣0⃣ நாட்களாக எங்கே இருந்தார்❓ எப்படி வாழ்ந்தார்❓ யார் யாரை சந்தித்தார்❓ என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டு அவரது வாக்குமூலத்தை சிபிசிஐடி 👮♂காவல்துறையினர் காணொளி பதிவு செய்தனர். மேலும், மருத்துவ பரிசோதனையில் தனது கணுக்காலில் 🐶நாய் கடித்ததாக முகிலன் தெரிவித்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி ஷங்கர் மற்றும் எஸ்.பி. மல்லிகா 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, முகிலன் மீது, 👩🏻பெண் ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கு கடந்த மே மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 👮♂காவல்துறையினர் முகிலனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை சென்னை எழும்பூர் 🏛நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment