🍾டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை😯 - Agnipuratchi

🍾டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை😯

Share This

கடந்த 📆மே மாதம் நடைபெற்ற 🗳மக்களவை தேர்தலின் போது, 💸பணப்பட்டுவாடா புகார் காரணமாக 🏛வேலூர் தொகுதிக்கு மட்டும் 🗳தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு 🇮🇳இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் தேர்தல் அறிவிப்பை🔈 வெளியிட்டது. அதன்படி, வரும் 📆ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் 🌱அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், 🌞திமுக சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் களத்தில் போட்டியிடுகிறார்கள்🎉. இதனையடுத்து, 🏛வேலூர் மக்களவை 🗳தேர்தலை ஒட்டி, 🍾டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது📣. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி⚖, வரும் 📆ஆகஸ்ட் 3, 4, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 🍾டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்🔒 என்று கூறப்பட்டுள்ளது🗣. வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் ஆகஸ்ட் 📆9ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட🔈 உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages