அருணாச்சலம் முருகானந்தத்தை 👀சந்தித்தார் 🏏கிரிக்கெட் வீரர் பிராவை. - Agnipuratchi

அருணாச்சலம் முருகானந்தத்தை 👀சந்தித்தார் 🏏கிரிக்கெட் வீரர் பிராவை.

Share This

மேற்கிந்திய தீவுகள் 🏏கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான 👨பிராவோ நேற்று முன்தினம் திடீரென 🏛தமிழகம் வந்தார். இதனையடுத்து நேற்று 🏛கோவையில் வசிக்கும் 👨அருணாச்சலம் முருகானந்தத்தை சந்தித்தார்👀. குறைந்தவிலையில்💸 சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்து, அதன்மூலம் ஆயிரக்கணக்கான 👥மக்களை பயன்பெற செய்தவர் இந்த அருணாச்சலம் முருகானந்தம்👏 என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த சேவையை பாராட்டி👌 மத்திய 🏛அரசு கடந்த ஆண்டு இவருக்கு 🏆பத்மஸ்ரீ விருது வழங்கியது. இதற்கிடையே, இந்த சந்திப்பில்👀 முருகானந்தத்திடம் ⏬குறைந்த 💸விலை சானிட்டரி நாப்கின் திட்டத்தை, 🏏பிராவோ தனது சொந்த நாட்டில் செயல்படுத்துவது குறித்து பேசியதாகவும்🗣, இதனையடுத்து இந்த திட்டத்திற்கு அருணாச்சலம் முருகானந்தம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும்👍 கூறப்படுகிறது. மேலும், 👩பெண்கள் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு 🎥குறும்படம் ஒன்றையும் 🏏பிராவோ எடுக்கவுள்ளார்😍 என்றும் 📰செய்திகள் தெரிவிக்கிறது. 🏏சிஎஸ்கே அணியில் விளையாடி 🏛தமிழக 👥ரசிகர்களின் பேவரைட் வீரராக வலம் வரும் 🏏ப்ராவோவின் இந்த சமூக அக்கறையை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி 🌎உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பாராட்டி👏 வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages