வெற்றிகரமாக🎉 நிலவின்🌕 வட்டப் பாதைக்குள் நுழைந்த 🚀சந்திராயன் 2👏 - Agnipuratchi

வெற்றிகரமாக🎉 நிலவின்🌕 வட்டப் பாதைக்குள் நுழைந்த 🚀சந்திராயன் 2👏

Share This

🌕சந்திரனின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 🚀சந்திரயான் 2 விண்கலம் கடந்த 📆மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 📆ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக🎉 புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இந்நிலையில், இன்று 🌎புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய🚫 சந்திராயன்-2 நிலவின் சுற்றுவட்ட பாதையை சுற்றத் தொடங்கியுள்ளதாக👏 இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்🔈. மேலும் நாளை மற்றும் ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 விண்கலத்தின் திசை மாற்றப்படும் என்றும், 4 முறை மாற்றிய பிறகு 🛣100 கி.மீ. தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன் 2 அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, "🚀சந்திராயன் 2வில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும். பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை 2 முறை மாற்றப்பட்டு😯 அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும்⏬. செப்டம்பர் 7ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி விக்ரம் லேண்டர் தனது ஆய்வை தொடங்கும்👍" என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages