🚰கடலூர் மாவட்டத்தில் குடிநீரில் விஷம் கலந்த மர்ம நபர்கள்-👥30க்கும் மேற்பட்டோர் மயக்கம்😳 - Agnipuratchi

🚰கடலூர் மாவட்டத்தில் குடிநீரில் விஷம் கலந்த மர்ம நபர்கள்-👥30க்கும் மேற்பட்டோர் மயக்கம்😳

Share This

🏛கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தில் வசிப்பவர் 👨ரமேஷ் (35). இவரது மனைவி 👩அஞ்சுகம் (30). இந்த தம்பதிக்கு, ரெமோ, அஞ்சலி, ராம்போ, ரோகித் என்ற 4 குழந்தைகள் உள்ளனர்😯. டி.வி.புத்தூர் கிராமத்தில் மேல் நிலை 💦நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அஞ்சுகம் நேற்று 🏡வீட்டுக்குப் பின்புறமுள்ள, குடிநீர் குழாயில், 🌊தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒருவித 💊மருந்து கலந்த வாசனை வந்தது. அதில் அவர் தேநீர் தயாரித்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தார். அப்போது அவரது 🏡வீட்டில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களுக்கும் 👩அஞ்சுகம் 🍵தேநீர் கொடுத்தார். இந்நிலையில், தேநீரை பருகிய சிறிது நேரத்திலேயே அஞ்சுகம் மற்றும் 7 குழந்தைகள் மயங்கி கீழே விழுந்தனர்😳. இதனையடுத்து அவர்கள் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து, இந்த குழாய்களில் குடிநீர் அருந்திய 👥மாணவ-மாணவியர், பெரியவர்கள் உள்ளிட்ட 👥15க்கும் மேற்பட்டோர் மயக்கம்😱 அடைந்தனர். 
இதனையடுத்து, 🚰குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர்த் தொட்டியில் 🌾விவசாயத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்து கலக்கப்பட்டிருந்தது😨 தெரிய வந்தது. 👨ரமேஷூக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது🙄. எனவே அவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் விஷமருந்தை கலந்திருக்கலாம் என 👮போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே 🚰குடிதண்ணீரில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள் யார்❓ஏன் அவ்வாறு கலந்தனர் என கருவேப்பிலங்குறிச்சி 👮போலீசார் விசாரணை🗣 மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages