🏛தமிழகத்திடம் கால்வாய் சீரமைக்க 💰350 கோடி ரூபாய் நிதி கேட்கும் 🏛ஆந்திர அரசு😱 - Agnipuratchi

🏛தமிழகத்திடம் கால்வாய் சீரமைக்க 💰350 கோடி ரூபாய் நிதி கேட்கும் 🏛ஆந்திர அரசு😱

Share This

சென்னை 👥மக்களின் 🚰குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை ஆந்திர மாநில அரசு ✍ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். அதன் படி, இந்த ஆண்டு முதல் தவணையாக கடந்த ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை திறக்கப்பட வேண்டிய 4 டி.எம்.சி.க்கு பதிலாக 💦1.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கடந்த 📆ஜூலை முதல் 📆அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. 🌊தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதில் குறைந்த பட்சம் 💦4 டி.எம்.சி. தண்ணீராவது விரைவில் திறக்க வேண்டும், அதன் மூலம், வறட்சியில் தவிக்கும், 🏛சென்னையின் 🚰குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்😒, என்று 🏛தமிழக அரசு சார்பில் 🙏கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 
இந்நிலையில், கால்வாய் சீரமைப்பு 💸தொகையை வழங்கினால் உடனடியாக 💦தண்ணீர் திறப்பதாக 🏛ஆந்திர மாநில 🤵அதிகாரிகள் கூறி வருகின்றனர். கால்வாய் பராமரிப்பு செலவை 🏛2 மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ✍ஒப்பந்த விதி உள்ளது. இதற்காக 🏛தமிழக அரசு தரப்பில் ஆந்திர அரசிடம் 💰600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து மேலும், 💰350 கோடி ரூபாயை ஆந்திர மாநில 🤵அதிகாரிகள் கேட்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுவது🙄 குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages