நேரடி 🌾நெல் விதைப்பை ஊக்குவிக்க 💸ரூ.600 உழவு மானியம்-தமிழக 💺முதல்வர்🎙  - Agnipuratchi

நேரடி 🌾நெல் விதைப்பை ஊக்குவிக்க 💸ரூ.600 உழவு மானியம்-தமிழக 💺முதல்வர்🎙 

Share This

நேரடி 🌾நெல் விதைப்பை ஊக்குவிக்க 💸ரூ.600 உழவு மானியம்-தமிழக 💺முதல்வர்🎙 
 
நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு 💸ரூ.600 உழவு மானியமாக வழங்கப்படும் என்று 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்📣. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும் போது சுமார் 💦40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, 🌾நெற்பயிரும் 📆10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும்👍. இதனை முன்னெடுத்து செல்வதற்காக சி.ஆர் 1009, சி.ஆர் 1009 சப் 1, கோ 50, ஏ.டி.டி 50, டி.கே.எம். 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க😯 வேளாண்மை துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்⚖" என்றும், "அதன்படி, 🏝5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் 👥விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்குவதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 🏛டெல்டா மாவட்ட 🌾விவசாயிகள் மட்டுமல்லாமல் இதர 🏛மாவட்ட விவசாயிகளும் நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்து உழவு 💸மானியத்தை பெற்று 💦நீரை சேமித்து அதிக விளைச்சல் பெற கேட்டுக்கொள்கிறேன்🙏" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages