8. புகையில்லா போக்குவரத்தை கட்டாயமாக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல். - Agnipuratchi

8. புகையில்லா போக்குவரத்தை கட்டாயமாக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.

Share This

குறுகிய காலத்தில் புவிவெப்பமடைதலை தடுப்பதற்கு, குறைந்த காலமே வளிமண்டலத்தில் நீடிக்கும் காலநிலை மாசுக்காற்று வகைகளை (SLCPs -Short-Lived Climate Pollutants) கட்டுப்படுத்துவது, மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில் புகைக்கரி (Soot) எனப்படும் மாசுக்காற்று, கரியமிலவாயுவை விட 3000 மடங்கு அதிகமாக வெப்பத்தை பிடித்து வைக்கிறது. அதாவது, புகைக்கரியின் அளவு குறைவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் புவிவெப்ப அதிகரிப்பு (20 ஆண்டுகளில்) கரியமிலவாயுவை விட 3000 மடங்கு அதிகமாகும்.

மேலும், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்த வேண்டியது சட்டப்படியான தேவை. ஆனால், பெரும்பாலான வாகனங்களில் இந்த விதி மீறப்படுகிறது. முறையான திடீர் சோதனைகளும் முறையான கண்காணிப்பும் இல்லாததே இதற்கான காரணம் ஆகும். ஒருவர் வாகனத்தின் புகை மற்றவர்களின் உடல்நலனை பாதிப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. இந்த தீமை தடுக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages