பால் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் பணம்💸-ஆவின்🔈 - Agnipuratchi

பால் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் பணம்💸-ஆவின்🔈

Share This

ஆவின் நிர்வாகம் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது. அதில், "மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 🏛அரசு விலக்கு🚫 அளித்தது. இந்தநிலையில், சுற்றுப்புறச்சூழலை 💪பாதுகாக்கும் விதமாக, வாடிக்கையாளர்கள் ஆவின் பால் காலி கவர்களை சில்லரை வணிகர்கள், 💸சில்லரை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், 🏢வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க 🏢அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி கவருக்கு 💸10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம்😯" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், காலி பால் கவர்களை 👥பொதுமக்களிடம் தனியார் பால் நிறுவனங்களும் வாங்குவதற்கு தயாராக வேண்டும்👍 என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா 📲தொலைபேசி 🔢எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ👇 
துணை பொது மேலாளர்- வடக்கு-94442 47327 
துணை பொது மேலாளர் மையம்-73585 00929 
உதவி பொது மேலாளர் (பொறுப்பு) தெற்கு-97907 73955

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages