🇮🇳இந்தியாவின் தற்போதைய 💸பொருளாதார நிலை குறித்து நிர்மலா சீதாராமன்🎙 - Agnipuratchi

🇮🇳இந்தியாவின் தற்போதைய 💸பொருளாதார நிலை குறித்து நிர்மலா சீதாராமன்🎙

Share This

🇮🇳இந்தியாவின் தற்போதைய 💸பொருளாதார நிலை குறித்து நிர்மலா சீதாராமன்🎙
 
🇮🇳இந்தியாவின் தற்போதைய 💸பொருளாதார நிலை குறித்து 🏛டெல்லியில் மத்திய 💸நிதியமைச்சர் 👩நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்🗣. அதன்படி அவர்🎙, "உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதமாக உள்ளது. 🇮🇳இந்தியா மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் உள்நாட்டு 👥மக்களின் நுகர்வு குறைந்துள்ளது. சீனா தனது கரன்சியின் மதிப்பை குறைத்து⏬ உள்ளது.பொருளாதார நிலையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது😯. பொருளாதார சீர்த்திருத்தம் தொடர்ந்து நடைபெறக்கூடியது👍. பொருளாதார மாற்றங்களை 🏛அரசு கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் தொடங்க🎉 சுற்றுச்சூழல் அனுமதி விரைவாக வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்🔈 குறித்த விவரம்👇 
🔰பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும் 
🔰முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சார்சார்ஜ் வரி நீக்கம் 
🔰தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களை திருப்பி தர வேண்டும் 
🔰வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைப்பு. சிறு, குறு நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்க நடவடிக்கை 
🔰பல்வேறு துறைகளில் சீர்த்திருத்தத்துக்கு அரசு முன்னுரிமை 
🔰கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 60 நாளில் திரும்ப அளிக்கப்படும் 
🔰தொழில் தொடங்குவோருக்கான வரி விதிப்பு நீக்கப்படும். வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை. வருமான வரித்துறை தொடர்பான நோட்டீஸ், சம்மன் உள்ளிட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 1 முதல் ஒருங்கிணைக்கப்படும் 
🔰வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு 
🔰நிறுவனங்களின் சமூக சேவையில் குறைபாடுகளுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது. புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ தனி பிரிவு உருவாக்கப்படும் 
🔰அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாளில் அளிக்கப்படும் 
🔰தனியார் நிதி நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி. வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும் 
🔰பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும். அரசுத்துறைகள் புதிய கார்கள் வாங்க உள்ள தடை விலக்கப்படுகிறது 
🔰பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது 
🔰பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விரைவில் கொள்கை அறிவிக்கப்படும். ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020ம் ஆண்டு வரை ஒத்திவைப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages