🏛தமிழக அரசின் 📚கல்வி 📺தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்று முதல் துவக்கம்👏 - Agnipuratchi

🏛தமிழக அரசின் 📚கல்வி 📺தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்று முதல் துவக்கம்👏

Share This

🏛தமிழக 👥மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த⏫ சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு 📚நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி 🏢அலுவலகம், ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது👍. சில மாதங்களாக 📺தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஓட்டம் நடைபெற்றுவந்த நிலையில், இதன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று துவங்கியது🎊. இதனை தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி துவக்கிவைத்தார். 👥கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள்🗣, புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல்🎙, கல்வி உதவித்தொகைகளுக்கு ✍விண்ணப்பிக்கும் முறை, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்👀, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கல்வி 📺தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளன. ⌚24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சியை அரசு 🏛கேபிள் டி.வி.யில் சேனல் எண்.200-ல் பார்க்கலாம்👀 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. 
இவ்விழாவில் பேசிய 🏛தமிழக 💺முதல்வர்🎙, "📚கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது😯. இதன் காரணமாக மாணவர்களுடைய சேர்ப்பு விகிதம் அதிகரித்து⏫ இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது🎉" என்று பெருமிதம் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages