ப.சிதம்பரம் முன்ஜாமீன் 📜மனுவினை தள்ளுபடி செய்தது 🏛உச்சநீதிமன்றம்⚖ - Agnipuratchi

ப.சிதம்பரம் முன்ஜாமீன் 📜மனுவினை தள்ளுபடி செய்தது 🏛உச்சநீதிமன்றம்⚖

Share This

📲ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய 💸நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றன. இவரது முன்ஜாமீன் மனுவினை கடந்த 20ம் தேதி 🏛டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது⚖. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை 🤵சி.பி.ஐ. அதிகாரிகள் 📆21ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில்🏡 கைது⛓ செய்து விசாரித்து வருகின்றனர். அவரது விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது😳. இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றம் தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை🚫 எதிர்த்து ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு 📜மனு மீதான வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, ப.சிதம்பரத்தை 🤵சிபிஐ ஏற்கனவே கைது⛓ செய்திருப்பதால், முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது😯. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட 🏛நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் 🏛நீதிமன்றம் கூறியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages