பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் 🇮🇳இந்திய துணை தூதருக்கு சம்மன்📜 - Agnipuratchi

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் 🇮🇳இந்திய துணை தூதருக்கு சம்மன்📜

Share This

பாகிஸ்தான் ராணுவத்தின் 📰செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், தனது 💻ட்விட்டர் பதிவில், "எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேரும், இந்திய வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்டனர்😐" என்று பதிவு செய்திருந்தார். இதற்கு மறுப்பு❌ தெரிவித்து, இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் 🤵கர்னல் அமன் ஆனந்த், "பாகிஸ்தானின் தகவல் அடிப்படையற்றது மற்றும் கற்பனையானது🙄" என்று கூறினார். இதற்கிடையே, "🏔ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழல் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கில், 👮இந்திய ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 🔫துப்பாக்கிச்சூடு போன்ற செயல்பாடுகளை அதிகரித்துள்ளது😳" என்று மற்றுமொரு பதிவில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் 😡குற்றம்சாட்டியிருந்தார். 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட🔈 பின்னர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அதிகளவில் பணியிலமர்த்தப்பட்டனர்😯. இந்திய 🇮🇳ராணுவமும் அப்பகுதியில் 💪பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் இந்திய துணை தூதர் 🤵கவுரவ் அலுவாலியாவுக்கு 📜சம்மன் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages