போக்சோ’ மசோதா 🏛பாராளுமன்றத்தில் நிறைவேறியது. - Agnipuratchi

போக்சோ’ மசோதா 🏛பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

Share This

👧குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான 😳பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும், போக்சோ சட்ட ✍திருத்த 📄மசோதா,  🏛ராஜ்யசபாவில் நிறைவேறியது. நேற்று, 🏛லோக்சபாவில் இந்த மசோதா குறித்து, கடும் வாக்குவாதம்🗣 நடந்தது. 'தூக்கு தண்டனை தொடர்பான இந்த மசோதாவை, பார்லிமென்ட் 👥நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என, உறுப்பினர்கள் சிலர் 🙏கோரினர். அவர்களுக்கு பதிலளித்து🗣, அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில்🎙, ''இது, ஓட்டு வங்கி அரசியலுக்கான மசோதா இல்லை. இந்த 🇮🇳நாட்டின் எதிர்கால இளம் பிஞ்சுகளை காக்க வேண்டிய அவசிய மசோதா😯. அதனால், நிலைக்குழுவுக்கு அனுப்ப தேவையில்லை🚫'' என்றார். இது குறித்து, பா.ஜ.க,வின் ரீட்டா பகுகுணா ஜோஷி, தி.மு.க.,வின் கனிமொழி, காங்கிரசின் ரம்யா ஹரிதாஸ், சு.திருநாவுக்கரசர், ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜிவ் ரஞ்சன் சிங் உட்பட பலர் பேசினர்🗣. பின், இந்த மசோதா நிறைவேறியது🎉. இதையடுத்து, 💺ஜனாதிபதியின் ✍ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, சட்டமாக்கப்படும்👍. அதன் பிறகு, குழந்தைகளை கொடூரமான முறையில், பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, தூக்கு தண்டனை கிடைக்கும்👏 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages