தூத்துக்குடியை மாசு இல்லாத பழைய நிலைக்கு கொண்டுவரவே 🏭ஸ்டெர்லைட் ஆலையை 🔒மூட உத்தரவு😯 - Agnipuratchi

தூத்துக்குடியை மாசு இல்லாத பழைய நிலைக்கு கொண்டுவரவே 🏭ஸ்டெர்லைட் ஆலையை 🔒மூட உத்தரவு😯

Share This

🏢வேதாந்தா நிறுவனத்தின் 🏭ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி⚖ 🏛உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் 🤵சி.எஸ்.வைத்தியநாதன், "2018ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க 5 வருட அனுமதி கேட்ட போது, தண்ணீர் மாசுபாடு, காப்பர் கழிவுகளை முறையாக நீக்காததால் அனுமதியை நீட்டிக்க மறுக்கப்பட்டது🚫. தமிழகம் முழுவதும் உள்ள 🏭ஆலைகளில் இருந்து வெளியாகும் குளோரைடு உள்ளிட்ட வேத பொருட்களின் அளவை விட ஸ்டெர்லைட் ஆலை அளவுக்கு அதிகமான மாசுபாட்டை வெளியேற்றியுள்ளது. 🏛தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 69 நிறுவனங்கள் இருந்தாலும் அதிக பாதிப்பு😳 உண்டாக்கும் சிவப்பு மண்டலமாக ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே உள்ளது" என்று வாதிட்ட அவர், "கடல் மாசு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தூரம் 120 மீட்டர் மட்டுமே😯. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் 🌊கடல் நீர் 800 மீட்டர் தூரத்திற்கு மாசு அடைந்துள்ளது" என்றும், "🏛தூத்துக்குடியை பழைய நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 🏭ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது🔒" என்றும் தெரிவித்தார்🔈. இதற்கிடையே, இதற்கு பதிலளித்த 🏢வேதாந்தா நிறுவன 🤵வக்கீல், 🏛நீதிமன்றம் உத்தரவிட்டால்⚖ ஆலையில் உள்ள மாதிரிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 💪தயாராக உள்ளோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages