🏛குமரியின் குளச்சல் பகுதிகளில் கடல் மட்டம் ⏫உயர்ந்து 🌊கடல் அரிப்பு😱 - Agnipuratchi

🏛குமரியின் குளச்சல் பகுதிகளில் கடல் மட்டம் ⏫உயர்ந்து 🌊கடல் அரிப்பு😱

Share This

🏛கன்னியாகுமாரி மாவட்டத்தின் மேற்கு 🌊கடற்கரை பகுதியான நீண்டகரை முதல் நீரோடி வரையிலான அரபிக்கடல் பகுதிகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 📆மாதங்களில் கடல் மட்டம் உயர்ந்து⏫ சீற்றத்துடன் காணப்படுவது😨 வழக்கம். அதன்படி குளச்சல், கொட்டில்பாடு, வாணியக்குடி, கடியப்பட்டணம் பகுதிகளில் தற்போது கடல் நீர்மட்டம் உயர்ந்து கடல் சீற்றத்தோடு காணப்படுவதோடு👀 மட்டுமன்றி கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 அடி உயர⏫ மண் மேடு அரித்து செல்லப்பட்டதோடு 💦கடல் நீர் வீடுகளுக்குள் புகும் ⚠அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், "குளச்சல் துறைமுகப் பகுதியில் ஏற்பட்டுள்ள 🌊கடல் அரிப்பால் பழுதடைந்த நிலையில் உள்ள துறைமுக பாலத்தின் தூண்களை மூடியிருந்த மண்ணும் அரித்து செல்லப்பட்டது. இதனால் பாலமானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்😳 சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் 📆நாட்களிலும் 🌊கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர 🏘வீடுகளை பாதுகாக்கும் வகையில் அலை தடுப்புச்சுவர்🚧 அமைக்க வேண்டும்" என 🐠மீனவர்கள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages