💸வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 📆நாளை கடைசி நாள்😯-வருமான வரித்துறை🔈 - Agnipuratchi

💸வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 📆நாளை கடைசி நாள்😯-வருமான வரித்துறை🔈

Share This

ஒவ்வொரு 📆ஆண்டும் முந்தைய நிதியாண்டுக்கான ✍வருமான வரி கணக்கை 📆ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், ஒருசில முக்கிய காரணங்களுக்காக கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதல் ⌚அவகாசம், மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது😐. ஏனெனில், வரி கணக்கை தாக்கல் செய்வதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து வரி செலுத்துவோர் முன்வைத்த 🙏கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது⚖. இந்த கூடுதல் அவசாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாத காலம், அதாவது 📆செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக 💻சமூக வலைத்தளங்களில் 📰செய்தி பரவியது😳. இது குறித்து 💸வருமான வரித்துறை தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "💸வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ⌚காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் போலியானது🚫. எனவே, வரிசெலுத்துவோர் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவான 📆நாளைக்குள் (31-8-2019) தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்😯” என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages