👴கருணாநிதி நினைவு நாள்📆-நாளை மவுன ஊர்வலம்🚶 - Agnipuratchi

👴கருணாநிதி நினைவு நாள்📆-நாளை மவுன ஊர்வலம்🚶

Share This

மறைந்த 🌞தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு 📆தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது😐. இதை முன்னிட்டு, நாளை காலை ⌚8 மணிக்கு தி.மு.க. சார்பில் 🛣அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்படும் அமைதி ஊர்வலம் 🌊மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்கிறது🚶. மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கும் இந்த அமைதி ஊர்வலத்தில் 🏛மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்🎉. ஊர்வல நிறைவில், கருணாநிதி நினைவிடத்தில் 💐மலர் தூவி மவுன 🙏அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனையடுத்து, நாளை ⌚மாலை 5 மணிக்கு, முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்😯. கருணாநிதியின் சிலையை, மேற்கு வங்க மாநில 💺முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து மாலை ⌚5.30 மணியளவில், சென்னை ராயப்பேட்டை 🏟ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதி சிலை🗿 திறப்பு விழா🎉 பொதுக்கூட்டம்👥 நடைபெறுகிறது. இதில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்🎙. மேற்கண்ட நிகழ்வுகளில் 👥தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு 🌞தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு🗣 விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages