🌊மேட்டூர் அணைக்கு வரும் 💦நீர்வரத்து படிப்படியாக குறைகிறது⏬ - Agnipuratchi

🌊மேட்டூர் அணைக்கு வரும் 💦நீர்வரத்து படிப்படியாக குறைகிறது⏬

Share This

🏛கர்நாடக மாநிலத்தில் கடந்த சில 📆வாரங்களாக பெய்து வந்த ☔தென்மேற்குப் பருவ மழையால், கபினி, கிருஷ்ண ராஜசாகர், கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கின😳. இதனால் 🌊காவிரி ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளம் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது⏫. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது🙂. மீண்டும் வரலாறு படைக்கும் வகையில் 100 அடியைத் தாண்டியது. இதற்கிடையில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் 💺பழனிசாமி நீரை திறந்துவைத்தார். இதனால் 🌾விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்😍. இந்த சூழலில் கர்நாடக மாநிலத்தில் பருவ ☔மழை குறைந்துள்ளது. காவிரியில் நீர் வரத்து சரிந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் தமிழகத்திற்கு நீர் வரத்து தடாலடியாக குறைந்தது. அதன்படி, 💦2 லட்சம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில், 35,000 கன அடியாக சரிந்தது⏬. நேற்று 🌊மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடி என்ற நிலையில் இருந்தது. இன்று காலை மேலும் குறைந்து 30,000 கன அடி என்ற அளவில் 🌊காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 111.81 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 81 டி.எம்.சி ஆக உள்ளது. 🌾காவிரி டெல்டா பாசனத்திற்காக ⌚வினாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages