சென்னையில் இன்று முதல் 🔌மின்சார 🚍பேருந்து சோதனை ஓட்டம் - Agnipuratchi

சென்னையில் இன்று முதல் 🔌மின்சார 🚍பேருந்து சோதனை ஓட்டம்

Share This

போக்குவரத்து கழகங்களை 💰நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மின்சார பேருந்துகளை இயக்க தமிழக 🏛அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக 100 மின்சார 🚎பேருந்துகளை ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் தமிழக அரசு வாங்கவுள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன. 
இந்நிலையில் 🏁சோதனை ஓட்டமாக சென்னையில் 2 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளது. இதனை முதல்வர் பழனிச்சாமி இன்று 🎉துவக்கி வைக்கிறார். 54 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் குளிர்சாதன வசதியுடன், 👀கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 4 மணி நேரம் 🔌சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages