🏢கார்ப்பரேட் 💸வரி விகிதம் 22% ஆக குறைப்பு⏬-நிர்மலா சீதாராமன்🎙 - Agnipuratchi

🏢கார்ப்பரேட் 💸வரி விகிதம் 22% ஆக குறைப்பு⏬-நிர்மலா சீதாராமன்🎙

Share This

🏛கோவாவில் இன்று மத்திய 💸நிதியமைச்சர் 👩நிர்மலா சீதாராமன் தலைமையில் 👥37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக, 📰செய்தியாளர்களை சந்தித்து, தொழில் நிறுவனங்களுக்கான புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்😯. அதில், "உள்நாட்டு நிறுவனங்களுக்கு 💸கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைக்க⏬ திட்டமிட்டுள்ள நிலையில், உள்நாட்டு 🏢நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைக்கப்படுகிறது👍. இந்த நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் அனைத்து கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட 25.17% ஆக இருக்கும்😐. மேட் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும். 📆அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும்🎉 நிறுவனங்களுக்கு 💸15% மட்டுமே வரி விதிக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்📣. மேலும், வளர்ச்சியை ஊக்குவிக்க வருமான வரியில் புதிய ✍திருத்தங்கள் கொண்டு வந்ததாகவும், பங்குச்சந்தை மூலதனத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்👏 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages