சந்திரயான்-2 என்ற விண்கலத்தின் அங்கமான விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிட்டிருந்த நிலையில், நிலவில் இருந்து 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு😳 விட்டது. நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், படம் எடுத்து அனுப்பியதில், 🌕நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்து சாய்ந்து கிடப்பது தெரிய வந்தது😯. விக்ரம் லேண்டரின் 📆14 நாள் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதனுடன் தொடர்பு கொள்ள 🤵இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் பயனளிக்கவில்லை🚫. இனி லேண்டருன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம்😟 என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், "மிகுந்த வேகத்துடன் இறக்கப்பட்டதால் அது தரையில் மோதி கவிழ்ந்திருக்கலாம்😨 என்றும், அதன் காரணமாக செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது😐" என்று கூறப்படுகிறது. இதற்கிடையே 🏢நாசா அனுப்பிய தெளிவில்லாத 📷படங்களை இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள் ஆய்வு👀 செய்து வருகின்றனர்.
🚀விக்ரம் லேண்டரின் 📆ஆயுட் காலம் இன்றுடன் முடிவு😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment