💻ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக😡 வெளிநாட்டு 💸நிதியை பெற உதவியதாக முன்னாள் நிதி அமைச்சர் 👤ப.சிதம்பரம் கைது⛓ செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்😨. அவரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்🗣. இதனையடுத்து 👳மன்மோகன் சிங் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில், "சிதம்பரம் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில்⛓ இருப்பது கவலையளிக்கிறது😟. நம் நாட்டின் அரசாங்க முறைகளில் எந்த முடிவையும் 👤தனிநபர் எடுத்துவிட முடியாது. எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அனைவரிடமும் ஆலோசித்த🤔 பிறகு தான் முடிவு எடுக்க முடியும்😐. அப்படி எடுக்கப்படும் முடிவுகள் 📚கோப்புகளில் பதிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ள அவர், "💻ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 🤵அதிகாரிகள் ஆய்வு👀 செய்து பரிந்துரைத்த முடிவிற்கு தான் அப்போது அமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்😯. அப்படி இருக்கையில், முடிவை பரிந்துரைத்த அதிகாரிகள் யாரும் தவறு செய்யவில்லை🚫 எனில் அனுமதித்த அமைச்சர் மட்டும் எப்படி தவறு செய்திருப்பார்⁉. இந்த விவகாரத்தில் 🏛நீதிமன்றம் தகுந்த நீதியை⚖ வழங்கும் என எதிர்பார்க்கிறேன்👀" என்று தெரிவித்துள்ளார்🔈.
ப.சிதம்பரம் தவறு செய்யவில்லை🚫-மன்மோகன் சிங்🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment