🏛புதுச்சேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை 🛣அண்ணா சாலையில், டிராவல்ஸ் 🏢நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 👴பெருமாள்சாமி (வயது 50) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். பெருமாள்சாமி புதுச்சேரியில் இருந்து 🏛சென்னைக்கு 🚗காரில் பயணிகளை ஏற்றி வந்தார். இந்த கார் நேற்று இரவு சென்னை 🛣அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒயிட்ஸ் சாலை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது😳. சுதாரித்துக் கொண்ட 👴டிரைவர் பெருமாள்சாமி உடனே 🚗காரை ஓரமாக நிறுத்தி 👥பயணிகளை கீழே இறக்கினார். இதனையடுத்து, திடீரென 🚗கார் 🔥தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அவர் 🔥தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை😱. கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், அந்த வழியாக சென்ற மற்ற 🚲வாகன ஓட்டிகள் இதுகுறித்து 🚒தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்📲. அதன்பேரில், அவர்கள் விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்😌. இதனால் சிறிது ⌚நேரம் 🚌போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது😟.
சென்னை 🛣அண்ணாசாலையில் நடுரோட்டில் 🚗கார் 🔥தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment