புகழேந்தி விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேட்டி🎙 - Agnipuratchi

புகழேந்தி விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேட்டி🎙

Share This

🏛கோவையில் 🏨தனியார் ஓட்டல் ஒன்றில் கட்சியினருடன் அமமுக 📰செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 📹வீடியோவில் "இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை🚫. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன்😯. ஆனால் 💺ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை😐. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்👍" என பேசி இருந்தார். இதற்கு புகழேந்தி, 😒அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு பேசியதாகவும், முழு 📹வீடியோவை வெளியிட வேண்டும், அதனைப் பார்த்தால் முழுமையாக புரியும்😳 என்று தெரிவித்தார். இது அமமுக கட்சியினரிடையே பரபரப்பை😨 ஏற்படுத்தியது. 
இந்நிலையில் புகழேந்தி விவகாரம் குறித்து 🏛திருச்சியில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் 👥கூட்டத்தில் பங்கேற்ற பிறகு 📰நிருபர்களை சந்தித்த👀 டிடிவி தினகரன், "புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் 📺தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து🗣 நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீது தீர விசாரித்தபிறகே🗣 முடிவு எடுக்கப்பட்டது. அமமுகவில் இருந்து 🌱அதிமுக செல்லாமல் திமுகவுக்கு நிர்வாகிகள் செல்வது அவரவரது விருப்பம், அதை துரோகம் என்று சொல்லமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages