🇮🇳இந்தியா-✈சுவிட்சர்லாந்து இடையே 📄மூன்று ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தானது - Agnipuratchi

🇮🇳இந்தியா-✈சுவிட்சர்லாந்து இடையே 📄மூன்று ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தானது

Share This

இந்திய 💺ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு ✈சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று ✈ஸ்விட்சர்லாந்து சென்ற அவரை, சுவிட்சர்லாந்து ஜனாதிபதி 💺உவேலி மௌரர் வரவேற்றார்🙏. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று 📄ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தாகின. இது குறித்து தனது 💻டுவிட்டர் பக்கத்தில், "1. பருவநிலை மாற்றம் குறித்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு 2. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணி அமைப்பது 3.லாசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழிக்கான அமர்வை புதுப்பித்தல்” என்று பதிவிட்டுள்ளார்😯. இதனை தொடர்ந்து, 🇮🇳இந்தியாவிற்கு 😨அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க🚫 தனது முழு ஒத்துழைப்பை💪 வழங்குவதாக ✈சுவிட்சர்லாந்து 🏛அரசு தெரிவித்துள்ளது👍. ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது சுற்றுப்பயணத்தின் இறுதியாக நாளை ✈ஸ்லோவேனியாவிற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages