🏛மும்பையில் 🌴மரம் வெட்ட எதிர்ப்பு😡 தெரிவித்து போராட்டம்💪-144 தடை🚫 உத்தரவு⚖ - Agnipuratchi

🏛மும்பையில் 🌴மரம் வெட்ட எதிர்ப்பு😡 தெரிவித்து போராட்டம்💪-144 தடை🚫 உத்தரவு⚖

Share This

🏛மும்பை ஆரே காலனியில், மூன்றாவது 🚆மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அங்கு உள்ள 🌳2,656 மரங்களை வெட்டும் பணியில் 🏛அரசு ஈடுபட்டது. இதற்கு 😡எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் 🏛நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் 🌳மரங்களை வெட்டும் பணியில் அரசு தீவிரமாக இறங்கிய நிலையில், 👥பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதியில் 👮போலீசார் குவிக்கப்பட்டு😳, அவர்களை அப்புறப்படுத்தினர்😯. இச்சம்பவம் தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 29 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். அரே காலனிக்கு வெளியில் சில 👥போராட்டக்காரர்கள் ⛺முகாமிட்டுள்ளனர். அவர்களை காலனிக்குள் செல்ல முடியாதவாறு 👮போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்றும் 💪போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை🚫 உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான😨 சூழல் நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages