🏛சென்னை திருவொற்றியூரில் 💊300 கிலோ குட்கா பறிமுதல்👍 - Agnipuratchi

🏛சென்னை திருவொற்றியூரில் 💊300 கிலோ குட்கா பறிமுதல்👍

Share This

வடசென்னை பகுதியான சென்னை 🏛திருவொற்றியூரில் சிறுசிறு கடைகளுக்கு 💊குட்கா 💸விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை 🤵ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது😨. இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்றிரவு கொருக்குப்பேட்டை வழியாக 🚚குட்டியானை வண்டி ஒன்று சென்ற போது சந்தேகத்தின் பெயரில் அந்த 🚚வாகனத்தை தனிப்படை போலீசார் பின்தொடர்ந்து சென்று, அந்த வண்டியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அதில் குட்கா இருப்பதை அறிந்த தனிப்படை 👮போலீசார் ஓட்டுநர் 👤அமித் பாஷாவை கைது செய்து விசாரணை🗣 நடத்தினர். 
அப்போது, திருவொற்றியூர் பகுதியில் 🏪குடோனில் இருந்து கொண்டுவந்ததாக தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்ற 👥தனிப்படையினர் அதிரடி சோதனை👀 மேற்கொண்டனர். அங்கு மூட்டை மூட்டையாக சுமார் 💊300 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை😳 பார்த்த 👮போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்தியதில் தடை🚫 செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக வாங்கி அதை திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 💸சில்லறையாக விற்பனை செய்தது😱 தெரியவந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages