கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் 🏫மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மற்றும் சிகிச்சைப்பிரிவு மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் 💺விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பின்னர் ✍செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மகப்பேறு மருத்துவம் 70 சதவீதம் அரசு மருத்துவமனையில் நடப்பதாகவும், மீதம் 30 சதவீதம் மட்டுமே தனியார் 🏫மருத்துவமனைகளில் நடப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துவதை தடுத்து நிறுத்துவது என்பது 🤷♂சாத்தியமில்லாத ஒன்று எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். முன்னதாக தமிழகத்தில் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுவதால் 🦟டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் அவர் 🎙தெரிவித்தார்.
No comments:
Post a Comment