தெற்காசிய பொருளாதார நிலை குறித்து உலக 🏦வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘2019ம் ஆண்டு நிதியாண்டில் 🇮🇳இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த 📊வளர்ச்சி வீதம் 2021ம் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், 2022-ல் 7.2 சதவீதமாகவும் வளர்ச்சியடையும். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட ⏫அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் தெற்கு ஆசிய மண்டலத்தின் துணைத் தலைவர் 💺ஹார்ட்விக் ஸ்காபர் கூறுகையில், "உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலின் தாக்கம் தெற்காசியாவிலும் 🙄எதிரொலிக்கிறது. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், 💰முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியை பெருக்க முடியும்" என்று கூறினார்.
No comments:
Post a Comment