மத்திய அரசு 📣அறிவித்துள்ள முன்னேறத் துடிக்கும் 117 மாவட்டங்களில் தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் 🏗வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் திடீர் 🔍ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மத்திய பொது ஆய்வு 👥குழும அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது அரசு 🏥மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை முறைகள், படுக்கை 🛏வசதிகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், அரசின் சலுகைகள் குறித்து நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை கட்டுமான வசதிகள், அரசு அளிக்கும் 💰நிதி திட்டங்கள் வாரியாக பயன்படுத்தப் படுகிறதா என்பது குறித்தும் விரிவான ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment