தொழில் 💸முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 🏛கர்நாடகா திகழ்கிறது👍-நிதி ஆயோக்📜 - Agnipuratchi

தொழில் 💸முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 🏛கர்நாடகா திகழ்கிறது👍-நிதி ஆயோக்📜

Share This

💸பொருளாதாரம், தொழில், சுற்றுசூழல் சார்ந்த பல்வேறு கொள்கைகள், திட்டங்களை வகுக்க 🏛அரசுக்கு உதவும் நோக்கிலும், 💸தொழில் முதலீடு செய்ய விரும்பும் 🏢நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும் விதத்திலும் நிதி ஆயோக் ஆய்வறிக்கை📜 வெளியிடப்பட்டுள்ளது👍. பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறிய அளவிலான மாநிலங்கள் என மூன்று பிரிவுகளின்கீழ், நிதி ஆயோக் முதல்முறையாக வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில்📜, "தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் வரிசையில் 🏛கர்நாடக முதலிடத்தை பிடித்துள்ளது👏. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா, தமிழ்நாடு , குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 🏛மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன🎉" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. 
புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள உகந்த 🏛மாநிலங்களின் வரிசையிலும் 🏛கர்நாடகா முதலிடத்தில் உள்ளது👌. அதனை தொடர்ந்து தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன😯. அதேசமயம் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்த 📜பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளன😟 என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages