சென்னை ரிச்சி சாலையில் பெண்👩 மீது நாட்டு வெடிகுண்டு💣 வீச்சு!! - Agnipuratchi

சென்னை ரிச்சி சாலையில் பெண்👩 மீது நாட்டு வெடிகுண்டு💣 வீச்சு!!

Share This

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டைக்கு உட்பட்ட பகுதியில் கேசினோ தியேட்டர் அருகே பெண் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு💣 வீசியதை அடுத்து அந்தப் பெண் மருத்துவமனைக்கு🏥 கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த போலீஸ்👮 பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆட்டோவில் வழக்கறிஞர் மல்லிகா மற்றும் அவரது மகன் இருவரும் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 5⃣ பேர் கும்பல் இவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்கியது. பின்னர், அரிவாளால் தாக்கினர்😱.

இதில் காயம் அடைந்த மல்லிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொல்லப்பட்ட ரவுடி தோட்டா சேகரின் மனைவிதான் மல்லிகா என்பது தெரிய வந்துள்ளது. மல்லிகா மற்றும் அவரது மகனை கொள்ளும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages