உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுள்ளீர்கள்😨'-ஜெயகோபாலுக்கு 😡கண்டனம் - Agnipuratchi

உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுள்ளீர்கள்😨'-ஜெயகோபாலுக்கு 😡கண்டனம்

Share This

🏛சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 📆செப்டம்பர் மாதம் 💍திருமண நிகழ்ச்சிக்காக 🛣சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் 🚲இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற 👩இளம் பெண் நிலைகுலைந்து கீழே விழுந்ததையடுத்து, அவர் பின்னால் வந்த 🚛லாரி ஏறி, பரிதாபமாக உயிரிழந்தார்😟. பேனர் வைத்ததாக 🌱அ.தி.மு.க. நிர்வாகி 👤ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது😯. இவர்கள், கைது⛓ செய்யப்பட்டு 📆12 நாட்களாக சிறையில்⛓ உள்ள இருவரும் ஜாமீன் மனு📜 தாக்கல் செய்துள்ளனர். தனது மகனின் திருமணத்துக்காக வாழ்த்துக்💐 கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து 👥மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை🚫 எனவும் 📜மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. 
இந்த 📜மனுவை விசாரித்த 🤵நீதிபதி, "உங்கள் 🏡வீட்டு 👩மருமகளை வரவேற்க🙏 இன்னொருவர் 👩மகளை 😳கொன்றுவிட்டீர்கள்" என மனுதாரர்களுக்கு 😡கண்டனம் தெரிவித்தார். மேலும், "சம்பவத்துக்குப் பிறகு நீண்ட நாள் ஏன் தலைமறைவாக இருந்தீர்கள்❓" எனவும் கேள்வி எழுப்பினார். அப்போது உடல் நலக் குறைவால் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக 👤ஜெயகோபால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய 👮காவல்துறை தரப்பில் ⌚அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை வரும் 📆17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages