ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு வெளியீட்டுக்கான ✍விண்ணப்பங்கள் குறித்த தகவல்🔈 - Agnipuratchi

ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு வெளியீட்டுக்கான ✍விண்ணப்பங்கள் குறித்த தகவல்🔈

Share This

பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.ஆர்.சி.டி.சி., எனும், 'இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு, அதன் கடைசி நாளான நேற்றுடன் சேர்த்து, மொத்தம், 111.91 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 🇮🇳இந்திய 🚆ரயில்வேயின் கட்டமைப்பு வசதிகளை ⏫மேம்படுத்த நிதி திரட்டுவதற்காக, 🏢ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், 12.6 சதவீத பங்குகளை பொதுப் பங்காக வெளியிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை, 315 - 320 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, 2.01 கோடி பங்குகள், 💸10 ரூபாய் முகமதிப்பில் வெளியிடப்பட்டன. இவை தவிர, 1.6 லட்சம் பங்குகள், அதன் தகுதி வாய்ந்த 👥ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன👍. இந்த பங்கு 💸விற்பனை மூலம், 💰645 கோடி ரூபாய் திரட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது👀. பங்குகள் வாங்கும் வாய்ப்பு, நேற்றுடன் முடிவடைந்தது. 📆9ம் தேதி, பங்குகள் ஒதுக்கப்படலாம்😯 என தெரிகிறது. இதைத் தொடர்ந்து, 📆14ம் தேதி முதல் 🏢இந்நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் 📜பட்டியலிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages