🔌மின் இணைப்புக் 💸கட்டணம் பல மடங்கு ⏫உயர்வு - 👥பொதுமக்கள் அதிருப்தி - Agnipuratchi

🔌மின் இணைப்புக் 💸கட்டணம் பல மடங்கு ⏫உயர்வு - 👥பொதுமக்கள் அதிருப்தி

Share This

புதிதாக 🔌மின் இணைப்பு வழங்க ஒரு முறை மட்டும் வசூலிக்கப்படும் மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத் 💰தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம், வைப்புத் தொகை ஆகியவற்றை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ⏫உயர்த்தியுள்ளது.

அதன்படி, நகராட்சி, பேரூராட்சி, கிராம நிர்வாகத்தின் கீழ், ஒற்றை படுக்கை அறை கொண்ட 🏠வீட்டிற்கு 3 கிலோவாட் திறன்கொண்ட ஒரு முனை மின் இணைப்பு பெற பழைய கட்டணம் 1,600 ரூபாயாக இருந்தது. புதிய கட்டணம் 2,800 ரூபாயாக ⏫உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் புதைவட மின்கம்பி மூலம் இணைப்பு பெற, ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டின் 💺உரிமையாளர், 3 கிலோவாட் ஒரு முனை மின்சார இணைப்பு பெற 1,600 ரூபாய் செலுத்தி வந்த நிலையில், புதிய கட்டணம், 6,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 📉பொருளாதார மந்த நிலை காலத்தில், பொதுமக்களை பாதிக்கும் இந்த மின் இணைப்பு கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் 🗣வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages