ஆந்திராவை போல தமிழகத்திலும் 🍾டாஸ்மாக்'கினை மூடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்👍-டாக்டர் ராமதாஸ்🎙 - Agnipuratchi

ஆந்திராவை போல தமிழகத்திலும் 🍾டாஸ்மாக்'கினை மூடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்👍-டாக்டர் ராமதாஸ்🎙

Share This

🏛ஆந்திராவில் படிப்படியாக 🍾மது விலக்கு🚫 நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியை🗣 நிறைவேற்றும் வகையில், 🏛அம்மாநிலத்தில் 880 மதுக்கடைகள், அதாவது 20 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி மது விற்பனை நேரமும் 2 மணி நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "📆2016ம் ஆண்டில் 🏛தமிழகத்தில் 6,720 ஆக இருந்த 🍾மதுக்கடைகள் இப்போது 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளன⏬. மது விற்பனை ⌚நேரமும் 12 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "படிப்படியாக 🍾மது விலக்கை🚫 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும்🔒, விற்பனை நேரத்தை ⌚நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்கவும்⏬ அரசு🏛 முன்வர வேண்டும். அத்துடன் மதுக்கடைகளுடன் இணைந்த பார்களை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும்👍. குறிப்பிட்ட காலத்திற்குள் 🏛தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, ஒரு சொட்டு மதுகூட இல்லாத, மகிழ்ச்சியான🙂 தமிழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்💪" என்று 🙏கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages