AUDI ALTERAM PARTEM இது ஒரு லத்தின் மொழி வார்த்தைகள். இதன் அர்த்தம் இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே ஒரு முடிவிற்கு வருவேண்டும் என்பதாகும். அதாவது எதிர்தரப்பு வாதத்தையும் கேட்பதே நியாயமும், இயற்கை நீதி கொள்கையுமாகும் என்பது சட்டம் படித்த அனைவருக்கும் தெரியும். இது ஒரு சட்ட முதுமொழியும் கூட.
அப்படி இருக்கையில் PCR ஆக்ட், எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி ஒருவர் மீது ஒரு புகார் தரப்பட்டால், எவ்வித விசாரனையுமின்றி, புகார்தாரருக்கு ஆதரவாக FIR போடப்படும், புகாருக்கு ஆளான நபர் அநியாயமாக சிறையில் தள்ளப்படுவார் என்றால் அது எந்த வகையில் ஜனநாயக நாட்டின் மாண்பினை போற்றும் நியாயமான சட்டமாக இருக்க முடியும்.
Domestic violence ஆக்ட் Women harassment ஆக்ட்டை போன்றே PCR (எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம்) அப்பாவிகளை பழிவாங்க கொண்டு வரப்பட்ட ஒரு பைத்தியக்கார சட்டம் தானே!
நிச்சயம் மூளையில் தூமை படிந்த முட்டாள்களால் மட்டுமே இதுபோன்ற சட்டங்களை உருவாக்க முடியும்.
எல்லாவித தவறுகளுக்கும் தண்டனை கொடுக்க இந்திய தண்டனை சட்டம் இருக்கும்பொழுது இதுபோன்ற சட்டங்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்றால் பெண்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகளை அறுவடை செய்வதற்கே என்றால் அது மிகையல்ல.
இதுபோன்ற சட்டங்கள் பெண்களுக்கும் தலித் மக்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதை விட பிறரிடமிருந்து தனிமை படுத்தவே உதவும் என்பது இதை கொண்டு வந்த பைத்தியக்காரர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டதே!
நாட்டில் 80% பேர் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கும்பொழுது, 20% மக்களின் ஓட்டிற்காக, இத்தகைய சட்டம் குறித்து ஒரு சிறு எதிர்ப்பு கூட பாராளுமன்றத்தில் தெரிவிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களை( ஊமைகளை) மக்கள் எதிர்த்து கேள்வி கேட்காதது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
தலித் மக்களை சகோதரர்களாக பார்ப்பவர்கள் கூட இனி உச்சநீதிமன்றத்தின் ஏட்டறிவு தீர்ப்பின் மூலம் அச்சப்பட்டு, பழகுவதை கூட தவிர்க்கும் சூழல் உருவாகலாம்.
உயர்நீதிமன்ற நீதிபதி மீது அவரது மருமகள் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்தியதும், இந்திய தலைமை நீதிபதி மீதே மற்றொரு நீதிபதி எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி புகார் செய்ததையும் நாம் அறிவோம்.
மேலும் வெறும் 5 சதவித வழக்குகளே தண்டனை பெறும் நிலைவரை சென்று மற்ற 95 சதவிகித வழக்குகள், கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதை பறைசாற்றும் வகையில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதிலிருந்தே, இச்சட்டங்கள் எவ்வகையில் கீழ்த்தரமாக பழிவாங்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம்.
எனது தலித்திய நண்பர்கள் பலரே இந்த சட்டத்தை வெறுக்கும் வகையில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.
இது நமூக நல்லிணக்கத்திற்கு கேடான ஒரு தீர்ப்பு.
இனி இந்த சட்டம் சாதாரண மக்களை அச்சுறுத்துவதை விட அரசு ஊழியர்களை பெரும்பாலும் அச்சத்துடனே பணிபுரிய வைக்கும். கீழ்நிலை ஊழியர் தவறு செய்து அதை கண்டிக்கும் சூழல் உருவானால் அவர்கள் மீது இச்சட்டம் பாயலாம். அதன் காரணமாக அவர் மீது உடனடியாக விசாரனையின்றி, வழக்கு பதியப்பட்டு சிறை செல்லும் நிலை வரலாம். அத்தோடு அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஓய்வு பெறும் நிலையில் இவ்வழக்கில் சிக்கினால் அருக்கு கிடைக்கவேண்டிய எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். இதனால் அவரை நம்பி வாழும் குடும்பம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகலாம்.
இப்படி ஒரு பழிவாங்க பயன்படும் பைத்தியக்கார சட்டம் தேவையா?
இந்த கேடுகெட்ட சட்டத்தை ரத்து செய்தால்தான் உங்களுக்கு வாக்களிப்பேன் என மக்கள் பொங்கி எழுந்து அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்களை நிர்பந்திக்காத வரை இனி இந்த சட்டத்தின் மூலம் வரவிருக்கும் பெருந்துயர்களை மக்கள் சகித்துக்கொண்டு அனுபவித்தே தீரவேண்டும்.
உச்சநீதிமன்றமே இறுதி தீர்ப்பை அளித்துவிட்ட நிலையில் இனி பாராளுமன்றம் மூலமே இச்சட்டத்தை தகர்த்தெறிய முடியும் என்ற சூழ்நிலையை உணர்ந்து மக்கள் கொதித்தெழாத வரை இச்சட்டத்தை நீக்குவதற்கான வாய்ப்பே இல்லை.
மொத்தத்தில் PCR சட்டமும், எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டமும், உச்சநீதிமன்ற தீர்ப்பும் இயற்கை நீதியை சட்டப்படி கற்பழித்து கொன்றுவிட்டது.
No comments:
Post a Comment