👩பெண் வயிற்றில் 💉ஊசி வைத்து தைத்த டாக்டர், நர்ஸ் சஸ்பெண்ட்👍 - Agnipuratchi

👩பெண் வயிற்றில் 💉ஊசி வைத்து தைத்த டாக்டர், நர்ஸ் சஸ்பெண்ட்👍

Share This

🏛ராமநாதபுரம், உச்சிப்புளி அருகேயுள்ள மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்தவர் 👨கார்த்தி, கூலித்தொழிலாளி. இவரின் மனைவி 👩ரம்யா (21). கடந்த 📆17ம் தேதி பிரசவத்திற்காக உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 📆19ம் தேதி, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது😳. இதனையடுத்து நர்சுகள், சக்திபாமா, அன்பக செல்வி ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்🙄. பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது🙂. இந்நிலையில், கடந்த 📆2 நாட்களாக, 👩ரம்யாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதுடன் ரத்தக்கசிவு ஏற்பட்டது😨. இதனையடுத்து, 🏛ராமநாதபுரம் 🏥அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை👀 செய்ததில், ரம்யா வயிற்றில் 💉ஊசி இருந்தது தெரியவந்தது😱. இதனையடுத்து, அவர், அங்கிருந்து 🏛மதுரை 🏥அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்😯. இது குறித்து தெரியவந்ததையடுத்து, அவரது உறவினர்கள், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீதும், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 🤵மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி🙏 ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு 🚫போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பணியின் போது அலட்சியமாக செயல்பட்டதாக 👩நர்ஸ் அன்பக செல்வி மற்றும் டாக்டர் 🤵முகமது ஜாகிர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் 💺வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages