தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் அமைந்துள்ளது அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். அதே போல் பிரசவத்திற்கு என்று தனியாக வார்டு உள்ளது.
பிரசவ வார்டுகளில் 24 மணி நேரமும் பராமரிப்பில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
இங்கு 108 அவசர ஊர்தி மற்றும் மருத்துவமனை வாகனங்கள் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையின் பிரதான கட்டிடத்திற்கு செல்லும் வழியில் ரூபாய் 15 லட்சம் செலவில் சித்த மருத்துவமனை கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட சுகாதார துறை இயக்குனர் மாற்று இடத்தில் கட்ட பரிந்துரை செய்தார்.
இதனால் அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று 18/11/2019 காலை 10.00 அளவில் கட்டிடம் கட்ட பணியாளர்கள் வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு திரண்டனர்.
அப்போது ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா மருத்துவராக பணி புரிந்து வருபவர் சுஜாதா இவர் மக்கள் எதிர்க்கும் இடத்தில் கட்ட வேண்டும் என்பதில் குறிக்கோளாய் உள்ளார்.
இந்த நிலையில் ஏரியூர் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், ஆனால் சுஜாதா இதை சற்றும் பொருட்படுத்த வில்லை. உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் நான் அந்த இடத்தில்தான் கட்ட அனுமதிப்பேன் என பதில் கூறுகின்றார்.
இது குறித்து ஏரியூர் பாமக ஒன்றிய செயலாளர் ம.ஜெகதீசன் கூறுகையில் சித்தா மருத்துவ கட்டிடம் அமைக்க தேவையான நிலம் மருத்துவ மனை வளாகத்தில் உள்ளது ஆனால் அவசர ஊர்தி வந்து திரும்பும் இந்த இடத்தில் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
மருத்துவ மனை ஊழியர்களும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடத்தில் கட்டிடம் கட்டினால் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறு ஒட்டுமொத்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறும்போது சித்தா மருத்துவர் சுஜாதா மல்லுக்கட்டுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம்
கண்ணன்

No comments:
Post a Comment