🏔காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் 🛣நெடுஞ்சாலை மூடப்பட்டது😳 - Agnipuratchi

🏔காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் 🛣நெடுஞ்சாலை மூடப்பட்டது😳

Share This
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. பிரதான சாலைகள் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஸ்தம்பித்தன. பிற்பகலுக்கு பிறகு நிலவும் வானிலை சூழலை பொறுத்து ✈விமான வருகை, புறப்பாடு பற்றி முடிவு செய்யப்படும் என்று ✈விமான நிலைய 蘆அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடப்பு பருவ காலத்தில் முதல் முறையாக இன்று காலை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. வெப்ப நிலை உறைநிலைக்கும் கீழ் சென்றதால், மக்கள் கடும் குளிரை உணர்ந்தனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை காலை வேளையில் பாதிக்கப்பட்டது. மின் விநியோகமும் காலையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், "சாலைகளை மூடியபடி கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது" என்று ஸ்ரீநகர் 蘆துணை ஆணையர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages