🏛வேலூர் ⛓சிறையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற முருகன்👍 - Agnipuratchi

🏛வேலூர் ⛓சிறையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற முருகன்👍

Share This
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ⛓ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது. தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் மறுத்து வந்தார். இதனிடையே, ⛓ஜெயில் 蘆அதிகாரிகள் அவரிடம் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ⛓சிறையில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என 蘆அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். முன்னதாக முருகனுக்கு ஆதரவாக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages