🏛டெல்லியில் 🤵வழக்கறிஞர்கள் போராட்டம்💪 - Agnipuratchi

🏛டெல்லியில் 🤵வழக்கறிஞர்கள் போராட்டம்💪

Share This

🏛டெல்லியில் தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், 👮போலீசாருக்கும், 🤵வழக்கறிஞர்களுக்கும் இடையே, கடந்த 📆வாரம் மோதல்😳 ஏற்பட்டது. அது வன்முறையாக மாறியதில், 👥10க்கும் மேற்பட்ட 👮போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் 🤕காயம்அடைந்தனர். 🚔போலீஸ் வாகனம், 🔥தீ வைத்து எரிக்கப்பட்டது, பல வாகனங்கள் சேதமடைந்தன😟. இது தொடர்பாக நீதி விசாரணை🗣 நடத்த, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இந்நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைக் 😡கண்டித்து, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில்💪 ஈடுபட்டனர். நீதிமன்றப் பணிகளில் அவர்கள் ஈடுபடவில்லை🚫. அதேபோல், டில்லியில் அமைந்துள்ள, தீஸ் ஹசாரி, கார்கர்டோமா, சாகேத், துவாரகா, ரோஹினி, பட்டியாலா ஹவுஸ் ஆகிய ஆறு மாவட்ட 🏛நீதிமன்றங்களிலும், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து🙄 போராட்டத்தில் ஈடுபட்டனர். சாகேத் மாவட்ட நீதிமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள், 🚲மோட்டார் சைக்கிளில் வந்த 👮போலீஸ் அதிகாரியை கடுமையாக தாக்கினர்😨. இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றம்😰 ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages