டெல்லியில் மோடி-சரத்பவார் சந்திப்பு👀 - Agnipuratchi

டெல்லியில் மோடி-சரத்பவார் சந்திப்பு👀

Share This

🏛மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தவறிப் ☔பெய்த மழையால் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட 🌾பயிர்கள் சேதமடைந்து😟 விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் 🏛மத்திய அரசிடம் வலியுறுத்தினர்😳. இதையடுத்து வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 💸8 ஆயிரம் ரூபாயும், 🌾தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 18ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என ஆளுநர் 💺பகத்சிங் கோசியாரி அறிவித்திருந்தார்🔈. இந்நிலையில் 🌾விவசாயிகள் பிரச்சனை குறித்துத் தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், 🏛டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து👀 பேசினார். 🏛நாடாளுமன்றக் 🏢கட்டடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு ⌚40 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது👀 மகாராஷ்டிராவில் பருவம் தவறிப் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தது குறித்த புள்ளி விவரங்கள், அதை ஈடு செய்ய 🌾விவசாயிகளுக்கு 💸இழப்பீடு வழங்குவதற்கான 🙏கோரிக்கைகள் அடங்கிய 📜மனுவை பிரதமரிடம் சரத்பவார் வழங்கியுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages