பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி வாரண்ட்⛓ - Agnipuratchi

பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி வாரண்ட்⛓

Share This

🏛விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 🏢தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் ⛓கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்😯. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு🗣 வந்த போது உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் 👤கருப்பசாமி ஆகியோர் 🏛ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். எனினும் 👵பேராசிரியை நிர்மலா தேவி மனநலம் பாதிக்கப்பட்டு😳 தற்போது 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதனால் விசாரணைக்கு🗣 ஆஜராக முடியவில்லை🚫 என்றும் அவரது 🤵வழக்கறிஞர் தரப்பில் 📜மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு🗣 தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி 🤵பரிமளா உத்தரவிட்டார்⚖. இதனையடுத்து வரும் 📆28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டு⚖ வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages